×

அசாம் தம்பதி ஓசூர் அருகே தற்கொலை

ஓசூர்: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் அபித் (23). இவரது மனைவி அசின் அக்தர் லஸ்கர் (20). காதலித்து திருமணம் செய்த இருவரும் ஓசூர் அருகே சிச்சிறுக்காணப்பள்ளி கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்துல் அபித் அப்பகுதியில் ஒரு தனியார் பேட்டரி கம்பெனியில், தினக்கூலியாக 3 ஆண்டுகளாக வேலை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல் அபித் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதை பார்த்து பயந்துபோன அசின் அக்தர் லஸ்கரும் மற்றொரு அறையில் தூக்குப்போட்டு தந்கொலை செய்துள்ளார்.

Tags : Hosur ,Abdul Abid ,Assam ,Asin Akhtar Laskar ,Chichirukanapalli ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்