×

வடக்கு – வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகரும் மோன்தா புயல்!!

அமராவதி: வடக்கு – வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மோன்தா புயல் நகர்ந்து வருகிறது. மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் தீவிர புயலாக வலுவடைந்தது. வடக்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து, மோன்தா புயல் தீவிர புயலாக வலுவடைந்தது. மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே மாலை அல்லது இரவுக்குள் தீவிர புயலாக கரையை கடக்கும். மசூலிப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கில் 160 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. காக்கிநாடாவுக்கு தெற்கு, தென்கிழக்கே 240 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. புயல் கரை கடக்கும் நேரத்தில் 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் இடையிடையே 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Cyclone ,Monta ,Amaravati ,Cyclone Monta ,central-west Bay of Bengal ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...