×

உலக செயல்முறை மருத்துவ நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 

சென்னை: உலக செயல்முறை மருத்துவ நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:உலக செயல்முறை மருத்துவ (Occupational Therapy) நாளில், மாண்புடனும் சுதந்திரமாகவும் மக்கள் செயல்பட உதவும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.நமது திராவிட மாடல் அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ – ஒருங்கிணைந்த சேவை மையம், ஆட்டிசம் பாதித்தோருக்கான சிறப்புத் திறன் மையம் ஆகியவற்றை தொடங்கி இந்த செயல்பாடுகளை மேம்படுத்தி வருகிறது.அக்கறை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, ஒவ்வொரு தனிநபருக்கும் வாய்ப்பு கொண்ட தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : World Occupational Therapy Day ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Dravidian ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...