×

தொலைதூர இணையவழி படிப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்: யுஜிசி அறிவிப்பு

 

சென்னை: பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு: பிப்ரவரி பருவச் சேர்க்கைக்கான இணைய வழி, தொலைதூர படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. முழுமையான கட்டமைப்பு வசதிகளை கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள் தொலைதூர, இணைய வழியிலான படிப்புகளை கற்றுத்தர அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். /deb.ugc.ac.in/ எனும் வலைத்தளம் வழியாக நவம்பர் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நவம்பர் 20ம் தேதிக்குள் யுஜிசி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் விண்ணப்ப படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். திறந்தநிலை, இணையவழி படிப்புகளில் சேரும் முன்பு அதன் அங்கீகார நிலையை மாணவர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : UGC ,Chennai ,University Grants Commission ,Manish R. Joshi ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்