புதுடெல்லி: டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘மே 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ உபகரணங்களை திறம்படி பயன்படுத்துவது பிராந்திய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியது. நாங்கள் உறுதியான தீர்மானத்துடன் உறுதியான பதிலடி கொடுத்தாலும் நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதற்கு நமது படைகள் முழுமையாக தயாராக இருந்தாலும் நாம் தொடர்ந்து சுயபரிசோதனை செய்ய வேண்டும். சிந்தூர் நடவடிக்கை நமது எல்லைகளில் எங்கும் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதை மீண்டும் நமக்கு காட்டியுள்ளது. போர் போன்ற சூழ்நிலைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் ” என்று தெரிவித்தார்.
