அமராவதி: மோன்தா புயலால் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மாநில பேரிடர் மீட்புக்குழுக்களும் அங்கு தயார் நிலையில் இருக்கிறார்கள். வங்க கடலில் ஏற்பட்டுள்ள மோன்தா புயல் காரணமாக கடந்த 6 மணி நேரமாக 18கிலோ மீட்டர் வேகத்தில் புயலானது கரையை நோக்கி வருவதாகவும், சென்னையில் இருந்து 500கிலோ மீட்டரும், காக்கிநாடா இருந்து 570 கிலோ மீட்டரும், விசாகப்பட்டினத்தில் 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருப்பதாகவும், ஆந்திராவில் உள்ள மேற்கு மற்றும் வட மேற்கு நோக்கி இந்த புயலானது நாளை காலைக்குள் கடுமையான சூறாவளி புயலாக மாறி தீவிரமாக கரையை கடப்பதுகான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் கரையை கடக்கும் போது 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புயல் மற்றும் மழை காரணமாக மாநிலம் முழுவதும் பேரிடர் மற்றும் தேசிய பேரிடர் படையினர் பணியில் ஈடுபடுவதற்காக விஜயவாடா, திருப்பதி, கணக்காப்பள்ளி, ராஜமுந்திரி உள்ளிட்ட பலஇடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதை போன்று மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவ கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதை போன்று பல இடங்களில் விவசாய பாறைகள் உடையாமல் இருப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி வேளாண்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஓடைகள் மற்றும் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும்பணி வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை வரக்கூடிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அந்த அந்த மாவட்ட கலெட்டர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
