நெல்லையில் காளான் உற்பத்தியில் அசத்தும் இளைஞர்: மாதம் ஒரு லட்சம் லாபம் ஈட்டும் பட்டதாரி

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பட்டதாரி இளைஞர் ஒருவர் இயற்கை முறையில் சிப்பிக் காளானை உற்பத்தி செய்து மாதம் தோறும் ரூ.1 லட்சம் லாபம் ஈட்டி வருகிறார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சூரங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாலகணேஷ் எம்.பி.ஏ பட்டதாரி ஆனா இவர் படிப்பை முடித்ததும், சுயதொழில் மீதான ஆர்வத்தால் சிப்பிக் காளான் உற்பத்தியை தொடங்கி இருக்கிறார். வீட்டிற்கே அருகிலேயே 400 சதுரஅடி பரப்பளவில் 2 கொட்டைகள் அமைத்து காளான் விதைகளை பதப்படுத்தி 20 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்து மாதம் ஒரு லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுகிறார்.

அறுவடை செய்த காளான்களை பேக்கிங் செய்வது விநியோகிப்பது என பாலகணேஷ்க்கு அவரது தாய், தந்தை, தம்பி என குடும்பத்தினரும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். பாலகணேஷ் உற்பத்தி செய்யும் காளானுக்கு நெல்லை, கல்பட்டு, வள்ளியூர், நாகர்கோவில், அம்பாசமுத்திரம், பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆன்லைன் வாயிலாக ஆர்டர் எடுத்து மாற்ற மாவட்டங்களிலும் பாலகணேஷ் காளானை விநியோகம் செய்து சுயதொழில் தொடங்குபவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக்கிறார்.

Related Stories: