இன்ஜினில் சிக்கியது பசு; பாலத்தில் ரயில் நிறுத்தம்

மானாமதுரை: ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு தினமும் முன்பதிவில்லாத ரயில் (வண்டி எண்: 16850) இயக்கப்படுகிறது. நேற்று மாலை 3 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு மானாமதுரை வந்த ரயில் 5.06 மணிக்கு புறப்பட்டது.

மானாமதுரை அண்ணா சிலை ரயில்வே ேகட்டை கடக்க முயன்றபோது, குறுக்கே வந்த பசு மாடு ரயில் இன்ஜின் சக்கரத்தில் சிக்கி பலியானது. ரயில் இன்ஜினை டிரைவர் தொடர்ந்து இயக்கியபோது, மாட்டின் உடல் முழுவதும் இன்ஜின் சக்கரத்தில் சிக்கியதால் ரயிலை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு ஆற்றுப்பாலத்தில் ரயில் நின்றது. இதையடுத்து, இன்ஜினுக்குள் சிக்கி இருந்த மாட்டின் உடலை அகற்றினர். பின்னர் 5.50 மணிக்கு பாலத்தில் இருந்து திருச்சிக்கு கிளம்பி சென்றது.

Related Stories: