ஆந்திராவில் பேருந்து தீ பிடித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழர்கள்!!

ஹைதராபாத் : ஆந்திராவில் பேருந்து தீ பிடித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழர்கள் ஆவர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருந்து பெங்களூரு நகருக்கு 45 பயணிகளுடன் படுக்கை வசதி கொண்ட தனியார் வால்வோ பேருந்து நேற்று நள்ளிரவு புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து அதிகாலை 3.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்துக்கு வந்த போது எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி உள்ளது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 19 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்தில் காயமடைந்த பயணிகள் 27 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த தலா 6 பேர், தமிழ்நாடு, கர்நாடகாவைச் சேர்ந்த தலா 2 பேர்,பீகார், ஒடிசாவைச் சேர்ந்த தலா ஒருவர், அடையாளம் காணப்படாத ஒருவர் என 19 பேர் உயிரிழந்தனர். பேருந்து தீ பிடித்த போது, தப்பி ஓடிய ஓட்டுனர்கள் இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் உடல்கள் முழுமையாக எரிந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடல்களை அடையாளம் காண்பதற்காக தடய அறிவியல் நிபுணர்கள் அடங்கிய 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரம் பேருந்து விபத்து குறித்து விசாரிக்க ஆந்திர அரசு. உயர்மட்ட குழு அமைத்துள்ளது.

Related Stories: