மருது பாண்டியரின் நினைவுகளை நமது தலைமுறையினருக்கு அடையாளப்படுத்துவோம்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள்

 

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை மையமாகக் கொண்டு, சுதந்திரப் போராட்ட களம் கண்ட மாமன்னர் மருது பாண்டியர்கள் நினைவுதினம் இன்று. பெரிய மருது, சின்ன மருது சகோதரர்கள், தேசம் முழுவதும் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவர்களை ஒன்றிணைத்து விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.

1779ல், ஆற்காட்டு நவாப் மற்றும் தொண்டைமான் போன்ற அரசாட்சிகளுடன் போர் தொடுத்த மருது பாண்டியர்கள், அவர்களை வென்று, சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்ததுடன் இராணி வேலுநாச்சியாரை அரியணை ஏற்றினார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தங்களுக்கென்று தனித்த வீரம் செறிந்த வரலாற்றினைக் கொண்டிருக்கும் மருது பாண்டியரின் நினைவுதினத்தை, நமது தலைமுறையினருக்கு அடையாளப்படுத்துவதுடன், அவர்களது தியாக நினைவுகளைப் போற்றி வணங்குவோம்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: