உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளித்த 12 பேருக்கு உடனடி தீர்வு

ஈரோடு,அக்.24: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாமில் நேற்று மனு அளித்த பயனாளிகளில், 12 பேருக்கு உடனடி நடவடிக்கை எடுத்து, அதற்கான தீர்வுகளையும் அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். ஈரோடு மாவட்டம் நசியனூர் மற்றும் வள்ளிபுரத்தான்பாளையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

இந்த முகாம்களில் மனு அளித்தவர்களில்,தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஒருவருக்கு நல வாரிய அட்டையும், மின்சார துறையில் சார்பில் 3 பேருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சான்றிதழ்களையும்,ஒருவருக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச்சான்றிதழ், ஒருவருக்கு வருமான சான்றிதழ்,2 பேருக்கு சாதி சான்றிதழ், ஒருவருக்கு சொத்து வரி பெயர் மாற்றம், 3 பேருக்கு வீட்டு வரி ரசீது என மொத்தம் 12 பயனாளிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து, அதற்கான தீர்வுகளையும் அமைச்சர் வழங்கினார். இந்த முகாம்களில், எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், கே.இ.பிரகாஷ், எம்எல்ஏ சந்திரகுமார், பெருந்துறை தாசில்தார் ஜெகநாதன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: