கன மழையால் வீட்டின் சமையலறை இடிந்து விழுந்து விபத்து

கோபி,அக்.24: கோபி அருகே உள்ள ஆயிபாளையத்தில் கனமழை காரணமாக சமையலறை இடிந்து விழுந்தது. கோபி மற்றும் அதைச்சுற்றி உள்ள நம்பியூர், குருமந்தூர், ஆயிபாளையம், கரட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாகவே கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் குருமந்தூர், ஆயிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதில் ஆயிபாளையத்தை சேர்ந்த சரவணன் (35) என்பவரது வீட்டின் சமையலறை இடிந்து விழுந்தது. சமையலறை மட்டும் இடிந்து விழுந்ததால் சமையல் பொருட்கள் மட்டுமே சேதமடைந்தது.

 

Related Stories: