சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 16ம் தேதி முதல் நேற்று வரை 72 லட்சம் பனை விதைகள் நடப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பில் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து, ஒவ்வொரு ஊராட்சிக்கும் 5,000 பனை விதைகள் எனக் கணக்கிட்டு, தமிழ்நாடு முழுவதும் கோடி பனை விதைகள் நடும் “பனை விதை நடும் நெடும்பணி 2025 கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி துவங்கி மாநிலம் முழுவதும் சிறப்பாக நடந்து வருகிறது. செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 23 வரை, 38 மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு இணைந்து இதுவரை 72 லட்சம் பனை விதைகள் வெற்றிகரமாக நடப்பட்டுள்ளன.
