சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் காணப்படும் வெண்நுரை

சென்னை: பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் அதிகளவில் வெண்நுரை காணப்படும். பருவமழை காலங்களில் செம்பரபாக்கம் ஏரி திறக்கும்போதெல்லாம் அதன் வழியில் உள்ள கழிவுகளும் கடலில் கலந்து, வெண்மை நிறத்தில் நுரை வெளியேறுவதாக கூறப்படுகிறது.

ஆலைக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அடையாறு ஆற்றின் வழியாக மழைக் காலத்தில் கடலில் கலப்பது மூலமும் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று வெண்மையான நுரை வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இந்த வெண்மை நுரை மாதிரிகளை எடுத்துச் சென்று ஆய்வு செய்கின்றனர்.

Related Stories: