சீனர்களுக்கு அனுமதி ரத்தா? விமான நிறுவனங்கள் மறுப்பு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு சீனாவில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளது. இதில் இந்தியாவும் ஒன்று. வெளிநாட்டினருக்கான தற்போதைய விதிமுறைகளின்படி பயணிக்க தகுதியான சீனர்கள் முதலில் மூன்றாவது நாட்டிற்கு பயணம் செய்து அங்கிருந்து இந்தியாவிற்கு வருகிறார்கள். இந்தியாவிற்கு வரும் சீனர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சீனர்கள் யாரையும் விமானத்தில் ஏற்ற வேண்டாம் என்று மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.  ஆனால் விமான நிறுவனங்கள் இதனை மறுத்துள்ளன. சீனாவை சேர்ந்தவர்களை அனுமதிக்கக்கூடாது என்பது தொடர்பாக அரசு எந்த வழிகாட்டுதல்களையும் வழங்கவில்லை என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே அனைத்து பயணிகளையும் விமானத்தில் அனுமதிப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன.

Related Stories: