திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் 2000 திமுக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர், எம்பி, மேயர் வழங்கினர்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருவிக நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் துணை அமைப்பு செயலாளருமான தாயகம் கவி ஏற்பாட்டில், புளியந்தோப்பு பகுதியில் உள்ள அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மூத்த முன்னோடிகள் மற்றும் நிர்வாகிகள் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி ஆகியோர் கலந்துகொண்டு, 2000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில், திருவிக நகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் தண்டலம் கிருஷ்ணகுமார், மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், பகுதி செயலாளர் தமிழ்வேந்தன், வட்ட செயலாளர்கள் ருத்ரமூர்த்தி, பரிமளா சுரேஷ், தி.க.அபோய் தமீம், புஷ்பராஜ், கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: