தங்கசாலை பிரசார கூட்டத்தில் நயினார் பேசிய போது கலைந்து சென்ற மக்கள் பாஜவினர் அதிருப்தி

சென்னை: வண்ணாரப்பேட்டை தங்கசாலை அரசு அச்சகம் அருகே, துறைமுக சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், பாஜ சார்பில் பிரசார கூட்டம் நடந்தது. இதில், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜாராம், பாலகங்கா மற்றும் பாஜ நிர்வாகிகள் கரு நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச தொடங்கியதும், பொதுமக்கள் ஒவ்வொருவராக எழுந்து சென்றனர். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாற்காலிகள் காலியாக கிடந்தன. இதனால் பாஜவினர் அதிருப்தியடைந்து பிரசாரத்தை சிறிது நேரத்தில் முடித்துகொண்டனர்.

Related Stories: