பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்

நாமக்கல், அக்.12: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா அலுவலகங்களில் நேற்று பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் ஆகிய ஊர்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற்ற முகாமில், பொதுமக்கள் கலந்துகொண்டு ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், செல்போன் எண் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த முகாம்களில் மொத்தம் 80 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டதாக மாவட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: