உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி உடன்குடியில் மாவட்ட கிரிக்கெட் போட்டி அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தா

உடன்குடி, டிச.27: திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அளவில் கிரிக்கெட் போட்டிகளின் தொடக்கவிழா உடன்குடி சிவலூர் மைதானத்தில் நடந்தது. யூனியன் சேர்மனும், ஒன்றிய செயலாளருமான பாலசிங் வரவேற்றார். தொழிலதிபர் அஜய்பாண்டியன் போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள், சீருடைகளை வழங்கினார். விளையாட்டுப் போட்டிகளை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேட்டிங் செய்து துவங்கி வைத்தார்.

நிகழ்ச்சியை ஆசிரியர் ஜெயராஜ், மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், சாமி தொகுத்து வழங்கினர். 10நாட்கள் நடைபெறும் போட்டியில் முதல்பரிசாக ரூ.50ஆயிரம், 2வதுபரிசாக  ரூ.40ஆயிரம், 3வதுபரிசாக ரூ.30ஆயிரம், 4வது பரிசாக ரூ.20ஆயிரம் மற்றும் அனைத்து அணிகளுக்கும் வெற்றிக்கோப்பை, சிறந்த ஆட்டக்காரருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜெ.ஜெகன், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப்அலி பாதுஷா, மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், மூத்த காங்கிரஸ் தலைவர் வெற்றிவேல், திமுக நகர செயலர் ஜான்பாஸ்கர், மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞரணி  ராமஜெயம், நெசவாளரணி மகாவிஷ்ணு, துணை அமைப்பாளர்கள் வர்த்தக அணி ரவிராஜா, இளங்கோ, சுகு, கிருஷ்ணகுமார், இளைஞரணி அனஸ், மாணவரணி முகைதீன், சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு ஷேக்முகம்மது, சிராஜூதீன், மாணவரணி அமிர்தா மகேந்திரன், விவசாய அணி சக்திவேல், கலை இலக்கிய அணி ரஞ்சன், மாணவரணி செந்தில், மகளிர் தொண்டரணி விஜயா, ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலர் நவீன்குமார், இளைஞரணி அமைப்பாளர் பாய்ஸ், அஜய், துணை அமைப்பாளர் மனோஜ், நல்லூர் பஞ்.தலைவர் பரிசமுத்து, சாத்தான்குளம் யூனியன் கவுன்சிலர் சுதாகர், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் சலீம், காசிம், நகர பொருளாளர் தங்கம், சிவலூர் ஊர்த்தலைவர் அய்யாச்சாமி, காயல்பட்டினம் நகர செயலர் முத்துமுகமது மற்றும் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செட்டியாபத்து பஞ்.தலைவர் பாலமுருகன் செய்து வருகிறார்.

Related Stories: