×

வாலிபர் கொலையில் தவெக நிர்வாகி கைது

பெரம்பூர், அக்.10: பெரம்பூர் காமராஜ் தெருவை சேர்ந்தவர் அரவிந்தன் (24), என்பவரை கடந்த மாதம் 2ம் தேதி கொளத்தூர் அன்னை சத்யா நகரில் 5 பேர் அடித்து கொன்றனர். இதுகுறித்து திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே கொளத்தூரை சேர்ந்த மகேஷ் (27), நாகலிங்கம் (45) ராஜி (எ) மூட்டை (25) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கொளத்தூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த மதன் (எ) சுடுகாடு மதன் (34) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சரித்திர பதிவேடு ரவுடியான மதன் குமார், தவெகவில் நிர்வாகியாக உள்ளார். அந்த கட்சியில் மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு மதன்குமார் போட்டியிட்டு அதன் பிறகு அந்த பொறுப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : PERAMPUR ,ARVINDAN ,PERAMPUR KAMARAJ STREET ,KOLATUR ,ANNA SATYA ,Thiruvika Nagar police ,Kolathur ,
× RELATED கணக்கீட்டு படிவம் வீடு வீடாக சென்று...