சென்னை: ஆயுள் தண்டனைக் கைதி நாகேந்திரன் மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்துவதற்கான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதியாக இருக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளதால், இதற்கான விதிகளின்படி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நாளை நாகேந்திரனின் உடலுக்கு பிரேதப்பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
