சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில், மினி பேருந்துகளில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டது. அதேபோல அம்மா குடிநீர் பாட்டில்களிலும் இரட்டை இலை சின்னம் அச்சிடப்பட்டிருந்தது. இதற்கு தடை விதிக்கக் கோரியும், மினி பஸ்களில் வரையப்பட்ட இரட்டை இலை சின்னத்தை அகற்றக் கோரியும் திமுக சார்பில், 2013ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது, வழக்கு தற்போது செல்லத்தக்கதல்ல என்பதால், மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை ஏற்றுக் கொண்டு, வழக்கை வாபஸ் பெற நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
