தொலைநிலை பள்ளி மாணவர்களுக்கு அக்.14ல் பொதுத்தேர்வு: தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் அறிவிப்பு

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் பள்ளிக்கல்வியை தொலைநிலை வழியில் பயிற்றுவித்து வருகிறது. அதனுடன், திறன் மேம்பாட்டுக்கான தொழிற் படிப்புகளையும் வழங்குகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் இதன் வாயிலாக பலன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுக்கால அட்டவணையை என்ஐஒஎஸ் வெளியிட்டுள்ளது.
அதன்படி பொதுத்தேர்வுகள் வரும் அக்டோபர் 14ல் தொடங்கி நவம்பர் 18ம் தேதி வரை நடைபெறும். இந்த தேதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது. விரிவான தேர்வுக்கால அட்டவணையை மாணவர்கள் nios.ac.in எனும் வலைத்தளத்தில் அறிந்துகெள்ளலாம். ஹால்டிக்கெட்கள் தேர்வுகளுக்கு சில நாட்கள் முன்பு வெளியிடப்படும். பொதுத் தேர்வுகளின் முடிவுகள் தேர்வு முடிந்த 7 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும். இவ்வாறு தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: