பர்கூர் மலைப்பாதையில் எம்எல்ஏ காரை வழி மறித்த காட்டு யானை

அந்தியூர்,செப்.14: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் நடமாடும் 15 நியாய விலைக் கடைகளைத் திறந்து வைக்க எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், தனது காரில் சென்று கொண்டிருந்தார். தாமரைக் கரையில் இருந்து தாளக்கரை, கொங்காடை பகுதியில் சென்ற போது ஒற்றை யானை ரோட்டில் நின்றிருந்தது.

இதனைப் பார்த்த கார் ஓட்டுனர் காரை பின்புறமாக சிறிது தூரம் இயக்கி நிறுத்தினார். இதையடுத்து எம்எல்ஏ உடன் வந்தவர்கள் மற்றும் அப்பகுதி மலைவாழ் மக்கள் காட்டு யானையை சத்தம் போட்டு வனப்பகுதிக்குள் விரட்டினர். யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றவுடன் எம்எல்ஏ தன் பயணத்தை தொடர்ந்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: