இசைத் தாய் இளையராஜா: உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் வரவேற்றார். அவர் பேசுகையில், ‘‘இசையும், இளையராஜாவும் நம்முடன் எப்போதும் இணைபிரியாமல் இருப்பவர்கள். நம்மை தாலாட்டிக் கொண்டிருக்கும் இசைத்தாய் தான் இளையராஜா. சென்னை டு விழுப்புரம் தூரம் எவ்வளவு என்றால், 25 இளையராஜாவின் பாடல்கள் தூரம் என்று இளையராஜாவின் ரசிகர்கள் சொல்வார்கள். எப்போதும் நமது பிளே லிஸ்ட்டில் இளையராஜாவின் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். 82 வயதில் சிம்பொனி இசையமைத்து, சுறுசுறுப்புடனும் மற்றும் ஒழுக்கத்துடனும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இளையராஜா ஒரு உதாரணமாக இருக்கிறார். 1988ல் இசைஞானி என்ற பட்டத்தை தந்தவர் கலைஞர். அதுபற்றி ஒருமுறை கலைஞர் பேசும்போது, ‘நான் இந்த பட்டத்தை அவருக்கு தந்தது திட்டமிட்டு செய்யவில்லை. இளையராஜா மீது இருந்த பாசமும், அவர் இசை மீது இருந்த ஈர்ப்பும்தான் காரணம்’ என்று சொன்னார்’ என்றார்.

Related Stories: