வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது ரூ.15,516 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: எனது வெளிநாட்டு பயணங்களில் முத்தாய்ப்பாக ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் அமைந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் படம் திறந்தது பெருமைமிகு தருணம்’ என சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ‘மேலும் ‘வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது ரூ.15,516 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ரூ.15,516 கோடி மதிப்பிலான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 17,613 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’ எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: