லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை மாதவரத்தில் நேரடி ஒளிபரப்பு

மாதவரம்: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பெரியாரின் சுயமரியாதை இயக்கம், சிந்தனைகள், சமுதாயத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து விளக்கி சிறப்புரையாற்றினார். முதல்வரின் சிறப்புரையை பொதுமக்களும திமுக தொண்டர்களும் கேட்கும் வகையில் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில், மாதவரத்தில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் எல்இடி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஒளிபரப்பினை சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன், பகுதி செயலாளர்கள் புழல் நாராயணன், ஏ.வி.ஆறுமுகம், மாவட்ட அமைப்பாளர் மதன்குமார், வை.ம.அருள்தாசன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், அற்புதராஜ், மண்டல குழு தலைவர் நந்தகோபால் உள்பட மாவட்ட, பகுதி, வார்டு நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டு பார்த்தனர்.

Related Stories: