தேவேந்திர குல வேளாளர் பரிந்துரையை மத்திய அரசு ஏற்க கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மனித சங்கிலி போராட்டம்

நாகை,டிச.16: தேவேந்திர குல வேளாளர் பரிந்துரையை மத்திய அரசு ஏற்க கோரி நாகையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். தமிழக அரசு அனுப்பியுள்ள தேவேந்திர குல வேளாளர் பரிந்துரையை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாகை ஆர்டிஓ அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். வழக்கறிஞர் அணி செயலாளர் ஜீவபாரதி, மாவட்ட இணை செயலாளர் ரமேஷ்குமார், மாவட்ட பொருளாளர் கலையழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 7 உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதை மத்திய அரசு உடனே ஏற்க வேண்டும். தாமதம் செய்யாமல் மாநில அரசின் தேவேந்திர குல வேளாளர் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்தி அரசாணையாக வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி நாகை ஆர்டிஓ அலுவலகம் முன் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். இதன்பின்னர் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories: