தஞ்சை சரக வனப்பாதுகாவலர் பேட்டி மாப்படுகை, நீடூர் பகுதியில் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் கட்டுவதற்கான இறுதி ஆய்வு

மயிலாடுதுறை, டிச.16: மயிலாடுதுறை வழியாக செல்லும் கல்லணை பூம்புகார் சாலையில் மாப்படுகை என்ற இடத்தில் ரயில்வே பாதையை கடக்க வேண்டியுள்ளது, மேலும் அப்பாதை வழியாக பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன, 10 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்வே கேட் மூடப்படுவதால் மக்கள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகின்றனர், மேலும் ரிங்ரோடு அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதே போன்று மயிலாடுதுறை மணல்மேடு செல்லும் சாலையில் நீடூர் பகுதியிலும் ரயில்வே கேட் ஒன்று உள்ளது, இதனாலும் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.

இவைகள் இரண்டிற்கும் மேம்பாலம் அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகளால் திட்டமிடப்பட்டு இரண்டுமுறை இடம் தேர்வு செய்யப்பட்டது. நேற்று இறுதிகட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், ரயில்வே கட்டுமானத்துறை துணை முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வம், உதவிப்பொறியாளர் வெங்கட்ராமன், மணிவண்ணன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் நிர்மலாதேவி, உதவிப்பொறியாளர் நர்மதா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். நீடூர் மற்றும் மாப்படுகை பகுதிகளை பார்வையிட்டு மேம்பாலப்பணிகள் நடைபெறும்போது மாற்றுப்பாதைக்கான இடம் குறித்த தடங்கல்களை கேட்டறிந்தனர், அனைத்தும் சரிசெய்யப்பட்டுள்ளதால் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் நிர்மலாதேவி தெரிவித்தார்.

Related Stories: