ஆக்ஸ்போர்டு பல்கலையில் செப்.4ம் தேதி படம் திறப்பு உலகமயமாகிறார் பெரியார்: முதல்வர் சமூகவலைதள பதிவு

சென்னை: இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியாரின் படம் திறக்கப்பட உள்ளது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: உலகமயமாகிறார் பெரியார். ஆதிக்கம்தான் என் எதிரி என முழங்கி சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காக சுற்றிச் சுழன்று பரப்புரை செய்த தந்தை பெரியார் உலகம் முழுமைக்குமானவர். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினையொட்டி உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலையில், செப்டம்பர் 4 அன்று நடக்கும் கருத்தரங்கினில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தினை திறந்து வைத்து, தென்னக மயக்கம் தீர்த்த சுயமரியாதை இயக்கம் குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்கும்.

Related Stories: