ஒன்றிய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்..!!

சென்னை: ஒன்றிய நிதியமைச்சர், இந்தியன் வங்கி மேலாண்மை இயக்குநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார். இந்தியன் வங்கியில் உள்ளூர் அதிகாரிகள் 300 பேரை பணியமர்த்த 2024 அக்டோபரில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு நடத்தப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என அவர் குற்றச்சாட்டியுள்ளார். மேலும், தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியன் வங்கி நிர்வாகம் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என அவர் வாலியுறுத்தியுள்ளார்.

Related Stories: