கவின் ஆணவக்கொலை வழக்கு சுர்ஜித், எஸ்ஐ உள்பட 3 பேர் காவல் நீட்டிப்பு

கேடிசி நகர்: நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை வழக்கில், சுர்ஜித் மற்றும் அவரது தந்தை எஸ்ஐ சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோரின் காவல் செப்.9 வரை நீடிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐ.டி ஊழியர் கவின் செல்வ கணேஷ்(27), ஆணவ கொலை வழக்கில், காதலியின் தம்பி சுர்ஜித் மற்றும் அவரது தந்தை எஸ்ஐ சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது காவல் காலம் முடிந்ததால், சுர்ஜித், சரவணன், ஜெயபால் ஆகியோர் நேற்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் பாளை மத்திய சிறையில் இருந்தவாறே, நெல்லை 2வது கூடுதல் மற்றும் அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ஹேமா, அவர்கள் மூவரின் நீதிமன்ற காவலையும் மேலும் 15 நாட்கள் நீட்டித்து (செப்டம்பர் 9 வரை) உத்தரவிட்டார். வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கந்தசாமி ஆஜரானார்.

Related Stories: