அதிமுகவினரால் தாக்கப்பட்ட ஆம்புலன்ஸ் உதவியாளர் கர்ப்பிணி ஆவார் – திமுக மருத்துவரணிச் செயலாளர் எழிலன் தகவல்

சென்னை : அதிமுகவினரால் தாக்கப்பட்ட ஆம்புலன்ஸ் உதவியாளர் கர்ப்பிணி ஆவார் என்று திமுக மருத்துவரணிச் செயலாளர் எழிலன் தகவல் அளித்துள்ளார். திருச்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கிய சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “இபிஎஸ் பொறுப்பின்றி பேசியதன் விளைவாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டுள்ளார். முதலமைச்சராக இருந்த ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது காழ்ப்புணர்சியை| காட்டுவது என்ன வகையில் நியாயம்?. எடப்பாடி பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க வந்தவருக்கு மயக்கம் ஏற்பட்டதால்தான் ஆம்புலன்ஸ் அங்கு சென்றது,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: