சென்னையில் கட்டண உயர்வு ஏதும் பரிசீலனையில் இல்லை : மெட்ரோ நிர்வாகம்

சென்னை : டெல்லியில் மெட்ரோ ரயில் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்ட நிலையில், சென்னையில் கட்டண உயர்வு ஏதும் பரிசீலனையில் இல்லை என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தான் முடிவு செய்யும் என்று மெட்ரோ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. டெல்லியில் 8 ஆண்டுகளுக்கு பின் மெட்ரோ ரயில் கட்டணம் அனைத்து வழித்தடங்களிலும் ரூ. 1 முதல் ரூ.4 வரை இன்று முதல் உயர்ந்துள்ளது.

Related Stories: