புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலியில் அமைந்துள்ள முக்கிய வைணவ கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிக பயணத்தில் 2,000 பக்தர்கள் கட்டணமின்றி அழைத்து செல்லப்பட உள்ளனர். செப்.20 மற்றும் 27ம் தேதிகளிலும் அக்.4 மற்றும் 11ம் தேதிகளிலும் அந்தந்த மண்டலங்களிலிருந்து தொடங்கப்பட உள்ளன.

விண்ணப்பங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் அடுத்த மாதம் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான விபரங்களுக்கு அறநிலையத்துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Related Stories: