முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு ‘சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு’

சென்னை: சென்னை தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு’ என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்கு பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386. \”சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு\”. வணக்கம் வாழ வைக்கும் சென்னை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: