சென்னை: தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு 1050 சிறப்பு பேருந்துகள் வரும் 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு இந்தாண்டும் பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து இயக்கப்படும். மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் செல்வதற்கு www.tnstc.in என்ற இணைய தளத்திலும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
வேளாங்கண்ணி ஆலய திருவிழா 1,050 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
- வேலங்கண்ணி கோயில் விழா
- சென்னை
- தமிழ்நாடு மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகம்
- தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம்
- வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா
