அவனியாபுரம்: மதுரையில் நடைபெற உள்ள மாநாடு குறித்து அறிவிப்பு விரைவில் வரும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மதுரை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். பின்னர், அவர் காரில் ஏறிச் செல்லும் போது செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மதுரையில் நடைபெற உள்ள மாநாடு குறித்து விரைவில் அறிவிப்பு வரும்’’ என்றார். பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் காரில் புறப்பட்டுச் சென்றார்.
