கே.ஆர்.எஸ். அணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

திருச்சி: கே.ஆர்.எஸ். அணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியை தாண்டியது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிகள் மற்றும் ஆற்றங்கரையோரம் குளிக்க மாவட்ட ஆட்சியர் சதீஸ் தடை விதித்து உத்தரவிட்டார்.

Related Stories: