மலையாளப்பட்டி அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளியில் 3 ஆசிரியர் காலி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர்,டிச.9:பெரம்பலூர் அருகே மலையாளப் பட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நி லைப்பள்ளியில் காலியாக உள்ள 3பட்டதாரி ஆசிரிய ர்கள் பணியிடத்திற்கு தகு தியுள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம். கலெக்டர்  வெங்கடபிரியா தகவல். இ துகுறித்து அவர் தெரிவித் திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மலையாளப்பட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 3 பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல்) பணியிடத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் முறையாக நிரப்பப்படும் வரை ஒப்பந்த முறையில் மாதாந்திர தொகுப்பூதியத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் ஒரு கல்வியாண்டில் கோடை விடுமுறை தவிர்த்து 10 மாதங்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 19ன்படி முற்றிலும் தற்காலிக அடிப்படையில் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, வகுப்பு நடத்துதல் தேர்வு ஆகியவற்றின் மூலம் நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது முழு கல்வித்தகுதி விவரங்களுடன் தட்டச்சு செய்து வருகிற 28ம் தேதிக்குள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த காலி பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஆசிரியர் பணிக்கான முழு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் தவிர எந்தவிதமான படிகளும் வழங்கப்படாது. பணி நியமனம் செய்யப்படும் ஒப்பந்த ஆசிரியர்கள் அனைவரும் தற்காலிக பணியாளர்களாவர். பணி நியமனம் செய்யப்படும் ஒப்பந்த ஆசிரியர்களை இக்கல்வி ஆண்டு முடியும் வரை (கோடை விடுமுறை தவிர்த்து) அல்லது காலி பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் ஆசிரியர்களை கொண்டு முறையாக நிரப்பப்படும் வரை இதில் எது முந்தையதோ அதுவரையில் பணியில் தொடர அனுமதிக்கப்படுவர். விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி தகுதி சான்றுகளையும் இணைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது 04238-225235 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: