சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள `கிருஷ்ண ஜெயந்தி’ வாழ்த்துச் செய்தி: இந்த நன்னாளில், மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில்கொண்டு, கிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில், ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிட உறுதியேற்போம்.அதேபோன்று, கோகுல மக்கள் கட்சி மாநில தலைவர் எம்.வி.சேகர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
