பத்திரிகையாளர் நல வாரிய கூட்டம்: அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது

சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் 9வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் 9வது கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பத்திரிகையாளர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற 42 விண்ணப்பங்களும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற 8 விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டன. மேலும், 2024ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி முதல் கடந்த ஜூன் 15ம் தேதி வரை 29 பத்திரிகையாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகையாக ரூ.3.83 லட்சம் வழங்கப்பட்டதற்கு நலவாரியத்தின் குழு ஒப்புதல் பெறப்பட்டது.

பத்திரிக்கையாளர் நலவாரியத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமசடங்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவித்தொகைகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் ராஜாராமன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் வீரராகவ ராவ்,

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணைச்செயலாளர் கே.எம்.சரயு, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர்கள் செல்வராஜ், பாஸ்கரன், பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் ஆர்.எம்.ஆர் ரமேஷ், சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியன், நக்கீரன் கோபால், பி.கோலப்பன், லெட்சுமி சுப்பிரமணியன், தம்பி தமிழரசன், எஸ்.கவாஸ்கர், எம்.ரமேஷ், டி.தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: