முத்துப்பேட்டை அருகே விளாங்காடு கிராமத்தில் 200 பயனாளிகளுக்கு காய்கறி விதை தொகுப்பு

*எம்எல்ஏ வழங்கினார்

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அருகே விளாங்காடு கிராமத்தில் 200 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தளை தொகுப்பை எம்எல்ஏ மாரிமுத்து வழங்கி தொடங்கி வைத்தார்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த விளாங்காடு கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வேளாண்மை துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) அருண் சத்யா தலைமையேற்று நடத்தினார்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக திருத்துறைப்பூண்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் முன்னிலையில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து 200 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தளை தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த முகாமில் விளங்கிய இந்த காய்கறி விதை தளை தொகுப்பானது ஆறு வகையான காய்கறி விதைகள் அடங்கும்.

அதில் தக்காளி, கத்திரி, மிளகாய், அவரை, கொத்தவரை மற்றும் கீரை ஆகும். இவை அனைத்தும் அடங்கிய காய்கறி விதைத்தளைத் தொகுப்பு முழு விலை ரூபாய் 60 இதில் 100 சதவீத மானியத்தில் இலவசமாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த காய்கறி விதைத்தளை தொகுப்பு மற்ற கிராமங்களுக்கும் வழங்கப்பட உள்ளதால் இதற்கு தேவையான ஆவணங்களான ஆதார் அட்டை நகல் மற்றும் தொலைபேசி எண்ணுடன் தோட்டக்கலை துறை இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடைய வேளாண்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியின் போது துணை தோட்டக்கலை அலுவலர் குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் புலவேந்திரன், இளங்கோவன் மற்றும் கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: