அஜித்குமார் தாயிடம் மீண்டும் சிபிஐ விசாரணை

திருப்புவனம்: அஜித்குமாரின் தாயாரிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவரிடம், நகை மாயமானது பற்றிய புகாரில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையின்போது உயிரிழந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 12ம் தேதி முதல் தற்போது வரை சுமார் 27 சாட்சிகளிடம் விசாரணை நடந்துள்ளது. நேற்று முன்தினம் மடப்புரம் வந்த சிபிஐ குழுவினர், அஜித்குமாரின் தாயார் மாலதியிடம் மீண்டும் விசாரணை செய்தனர்.

Related Stories: