ஆறுமுத்தாம்பாளையம், கணபதிபாளையத்தில் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை

பல்லடம்,ஏப்.4:பல்லடம் பகுதியில் ஆறுமுத்தாம்பாளையம், கணபதிபாளையம் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையம் பி.டி.கார்டன், கணபதிபாளையம் ஊராட்சி செளடேஸ்வரி திருமண மண்டப வீதி, புளியம்பட்டி ஊராட்சி ஏ.டி.காலனி பட்டத்தரசி அம்மன் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் ரூ.21.25 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

இப்பணிகளை பல்லடம் எம்எல்ஏ, எம்.எஸ்.எம்.ஆனந்தன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன், ஊராட்சி தலைவர்கள் பாரதி சின்னப்பன்,உத்தமராஜ், ஊராட்சி செயலாளர் பிரபுசங்கர், பல்லடம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சித்துராஜ், அதிமுக நிர்வாகிகள் சொக்கப்பன்,பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆறுமுத்தாம்பாளையம், கணபதிபாளையத்தில் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: