- கொடுங்கையூர்
- சென்னை
- ஹரீஷ் குமார்
- நாராயணசாமி கார்டன் 3வது தெரு, ஸ்ரீவாரியார் நகர், கொடுங்கையூர்
- தி.நகர்
- ஜீவரேகா
- சஞ்சிஸ்ரீ
- ரஷ்யா...
சென்னை: கொடுங்கையூர் ஸ்ரீவாரியர் நகர் நாராயணசாமி கார்டன் 3வது தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் குமார் (42). தி.நகரில் உள்ள தனியார் கம்பெனியில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவரேகா. தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் சஞ்சிஸ்ரீ ரஷ்யாவில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். 2வது மகள் மதனஸ்ரீ (17), கொடுங்கையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு, மருத்துவராக வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு எழுதி இருந்தார். கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் மதனஸ்ரீ குறைந்த மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் கடந்த 2 மாதங்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்ற மதனஸ்ரீ, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மேலே சென்று பார்த்தபோது மதனஸ்ரீ தூக்கில் தொங்குவதை கண்டு அலறி கூச்சலிட்டு கதறி அழுதனர். தகவலறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார், மதனஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
