- பெரம்பலூர்
- -பிரிவு
- சாலை தொழிலாளர்கள் சங்கம்
- வேப்பந்தட்டை
- 9வது துணைப் பிரிவு மாநாடு
- தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் துறை சாலைத் தொழிலாளர்கள் சங்கம்
- வேப்பந்தாட்டை...
பெரம்பலூர்,ஆக.11: 40 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும் என்று வேப்பந்தட்டையில் நடைபெற்ற சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் உட்கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் 9-வது உட்கோட்ட மாநாடு வேப்பந்தட்டையில் நடந்தது. மாநாட்டிற்கு உட்கோட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். உட்கோட்ட துணைத் தலைவர் பெரிய சாமி அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
இதில் மாநாட்டின் நோக்கம் குறித்து மாநில துணைத்தலைவர் மகேந்திரன், கோட்ட செயலாளர் சுப்பிரமணியன், கோட்ட தலைவர் ராஜ்குமார் ஆகியோர் பேசினர். மாநாட்டில் சாலை பணியாளர்களின் 40 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ் சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும்.
தனியார் மயப்படுத்துதலைக் கைவிட வேண்டும். மாநில நெடுஞ் சாலைகளை தமிழக அரசே பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. மாநாட்டில் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், இளைய ராஜா, சந்திரசேகர், மதியழகன், மார்கண்டன், மணிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். உட்கோட்ட இணைச் செயலாளர்கள் பாலசுப்பிர மணியன் வரவேற்றார். குமார் நன்றி கூறினார்.
