வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் குமாரசாமி கருத்து

பெங்களூரு: ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நமது நாட்டில் முக்கால் நூற்றாண்டு காலமாக தேர்தல் ஜனநாயகம் உள்ளது. கடந்த 1951-52 முதல் 2024 வரை 18 மக்களவை தேர்தல்கள் நடந்துள்ளது. இப்போது தேர்தல் ஆணையத்தின் மீது சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வேடிக்கையாக உள்ளது. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதுபோல், தேர்தல் ஆணையத்தின் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: