×

அன்புமணி, ராமதாஸ் இருவரும் மாலை 5.30 மணிக்கு தனது அறைக்கு வரும்படி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு..!!

சென்னை: அன்புமணி, ராமதாஸ் இருவரும் மாலை 5.30 மணிக்கு தனது அறைக்கு வரும்படி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். பாமக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு துணை செயலாளர் முரளி சங்கர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மாமல்லபுரத்தில் 9ம் தேதி அன்புமணி ராமதாஸ் பொதுக்குழு கூட்டம் கூட்டவுள்ளதாகவும். அதற்கு அவருக்கு சட்டரீதியான தகுதி இல்லை என்றும். கடந்த மே மாதத்தோடு அன்புமணி ராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பதவி காலம் முடிந்துவிட்டதாகவும், தற்போது அன்புமணி ராமதாஸ் கூட்டத்தை நடத்த முடியாது.

பொதுக்குழு நடத்துவதற்கான அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழுவிற்கு தடைவிதிக்க வேண்டும். அதே போல் பாமகவினரை காசுகொடுத்து விலைக்கு வாங்குவதாகவும், சில மாவட்ட செயலாளர்களை கையில் வைத்து கொண்டு அவதூறு ஏற்படுத்துவதாகவும். கட்சிக்கும் நிறுவன தலைவர் ராமதாசுக்கும் அவதூறு ஏற்படுத்துவதாக அன்புமணி மீது குற்றம்சாட்டபட்டிருந்தது. இந்த மனு நேற்றைய தினம் அவசரமாக எடுக்கக்கூறி ராமதாஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி இந்த வழக்கை இன்றைய தினம் ஒத்திவைத்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ராமதாஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் அருள் வாதத்தை முன்வைத்தார். வாதம் தொடங்கியதும் நீதிபதி வாதத்தை நிறுத்தி விடுங்கள் இந்த வழக்கை பொறுத்தவரை அன்புமணி மற்றும் மருத்துவர் ராமதாஸ் இருவரையும் இன்று மாலை தனது அறைக்கு வருமாறும். அவர்கள் இருவரிடமும் தனியாக பேசி கொள்கிறேன். இருவரையும் அழைத்து வழக்கு தொடர்பாக விசாரிக்க விரும்புவதாகவும் எனவே வழக்கறிஞர் வாதம் வேண்டாம் என்றும் தெரிவித்தார். வழக்கை பொறுத்தவரையில் சுமுகமான முடிவு எட்டும் வகையில் தீர்வு எட்டுவதற்காக இருவரையும் தனது அறைக்கு வரும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

 

Tags : Judge ,Anand Venkatesh ,Anbumani ,Ramadoss ,Chennai ,Murali Shankar ,Madras High Court ,PMK ,
× RELATED தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர்...