அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை தொடர்ந்து கிண்டல் செய்கிறார்: உத்தவ் தாக்கரே விமர்சனம்

புதுடெல்லி: டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா (யூபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘‘அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவையும், நரேந்திரமோடியையும் தொடர்ந்து கேலி செய்கிறார். அவருக்கு பதிலளிக்கவும், அவரிடம் இருந்து பதில்களை தேடவும் நம்மால் முடியவில்லை. வெளியுறவு கொள்கையில் இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டது. நாட்டிற்கு தற்போதைய சவால்களை சமாளிப்பதற்கு ஒரு வலுவான பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர் தேவை” என்றார்.

Related Stories: